Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ஆட்சியர் செய்த சிறப்பான செயல்….!!!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை யில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு 6 கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதனைப் போலவே தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக 76 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பிற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா காரணமாக பெற்றோரை மட்டும் இழந்த குழந்தைகள், பெற்றோர்களை இழந்து உறவினர்கள் ஆதரவில் உள்ள குழந்தைகளாகிய 45 குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதி உதவியாக ஒரு கோடி 35 லட்சம் ரூபாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

Categories

Tech |