உலகம் முழுவதும் கொரோனா எனும் பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையில் கொரோனா தொற்றால் இறப்போரின் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த 3,855 குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 2,160-ம், பாதுகாப்பு நிறுவனங்களில் இல்லாத குழந்தைகளுக்கு 2,000 ரூபாயும் மாதந்தோறும் வழங்கப்பட இருப்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.