Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விடாது போல…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… பறிபோன முதியவரின் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு  தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து 64  வயதுடைய முதியவர் தொற்றால்  பாதிக்கப்பட்டு சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக முதியவர் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |