கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடல் அளவில் பல பாதிப்புகளை சந்திப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தாலும் மறுபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சுகாதார மையம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. அவ்வப்போது எச்சரிக்கையும் விடுகின்றது.
ஆனால் பலரும் இதனை பின்பற்றுவதில்லை. இந்நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக எச்சரித்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானது ரத்த உறைதல், இதயம் சார்ந்த பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனை என மருத்துவமனைக்கு பலரும் செல்கின்றனர்.
இளம் வயதினருக்கும் மூளை அயர்ச்சி நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் ஒரு வருடத்திற்கு தங்களது உடலில் ஏற்படும் சிறிய மாற்றத்தையும் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.