Categories
உலக செய்திகள்

கொரோனாவின் அட்டூழியம்…. ஒரே நாளில் 2,286 பேர் பலி…. சிக்கி தவிக்கும் பிரேசில்…!!

 கொரோனா பரவலின் மிக மோசமான சூழலில் பிரேசில் சிக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் பிரேசிலும் இருக்கின்றது. இதனிடையே  பிரேசில் நாட்டில் இதுவரை 1,12,00,000 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதில் 2,68,370 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 79,876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் சிகிச்சை பலனின்றி 2,286 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆராய்ச்சியாளரும், மருத்துவர்களும் பிரேசில் கொரோனாவின் மிக மோசமான சூழலில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரேசில் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிப்பதற்கு தற்போது ஆட்சி செய்யும் ஜனாதிபதியின் முட்டாள்தனமான முடிவுகள்தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்னேசியா லூலாடா சில்வா குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |