நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் தபால் அதிகாரி உட்பட 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 217 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 ஆயிரத்து 348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.