பெரம்பலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 24 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,508 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மேட்டுத்தெரு டால்பின் நகரில் வசித்து வந்த பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.