Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கோர முகம்… அதிகரித்து வரும் உயிரிழப்புகள்… திண்டுக்கல்லில் ருத்ர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் நேற்று முன்தினம் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 73 வயது முதியவர், 76 வயது முதியவர், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண், 66 வயது முதியவர் ஆகிய 4 பேருக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |