Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 3 ஆம் அலையால் தத்தளிக்கும் மாகாணம்.. பிரதமர் வெளியிட்ட வீடியோ..!!

கனடாவின் ஒன்றாரியோவில் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரமாக பரவுவதால் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்துள்ளார்.  

கனடா நாட்டிலேயே அதிக மக்கள் தொகையுள்ள ஒன்றாரியோ மாகாணம் கொரோனாவின்  3ஆம் அலையின் பிடியில் உள்ளது. இதனால் இந்த மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களை  அனுப்புவதற்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்ராரியோ மாகாணத்தில் முதல் கட்ட பணியில் ஈடுபடுவதற்காக அரசு துறைகளிலிருந்து பெடரல் சுகாதாரப் பணியாளர்களை முதலில் திரட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் முன்கள பணியாளர்களின் சேவை, கிரேட்டர் டொரோண்டா என்ற பகுதிக்கு தான் முக்கியமாக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பல மாகாண தலைவர்களிடம் நேரடியாக, கலந்துரையாடியதாகவும் அவர்களால் முடிந்த உதவியை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒன்ராறியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 4,250 நபர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 நபர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |