இங்கிலாந்தில் கொரோனாவினுடைய 3 ஆவது அலை பரவுவதற்கான சாத்தியம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
இங்கிலாந்து நாட்டினுடைய பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்துவருகிறார். இந்நிலையில் இவர் ரஸ்ஹம் என்ற நகரில் பேசியதாவது, கொரோனா நோயை தடுப்பூசி திட்டம் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினார். இருப்பினும் கொரோனா முழுமையாக அழிந்து விட்டது என்று அர்த்தமும் அல்ல என்றார். மேலும் கொரோனாவினுடைய 3 ஆவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து மிக பெரிய அளவில் தடுப்பூசி திட்டம் இருப்பதால் 33.6 மில்லியன் அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 3 ஆவது அலைக்கு எதிராக சில தடுப்புகளை போட்டு வைத்துள்ளதாகவும் பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே விஞ்ஞானிகள் கொரோனாவினுடைய 3 ஆவது அலை பரவக்கூடும் என்று எச்சரித்தார்கள்.