Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிராக மேலும் பல தடுப்பூசிகள்… ரஷ்யா தகவல்…!!!

கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது அவசியம் என்று அந்நாட்டின் பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை தடுத்து நிறுத்தும் வகையில், ரஷ்யா ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயரில் தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த பொதுசுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன போபோவா கூறுகையில், ” கொரோனா பிரச்சனையை சமாளிக்க ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது மிக அவசியம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார். தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |