Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான போர்… இந்தியாவின் பங்கு மிகவும் அவசியம்… பில்கேட்ஸ் பெருமிதம்…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிக அவசியம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கிரான்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அதில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், ” அடுத்ததாக வரும் எந்த ஒரு தொற்றுநோயையும் சமாளிப்பதற்கு உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்களை சமாளிப்பதற்கு சரியான தடுப்பூசி தளங்கள் உருவாக்குவது மிகவும் அவசியம்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2 கால பிரச்சனைகளில் இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் தன் நாட்டின் மக்களை மிகவும் ஊக்கமளிக்கிறது. மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |