Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு பை பை … வெள்ளை மாளிகை திரும்பும் அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பூரணமாக குணமடைந்து ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளைமாளிகை திரும்பினார்.

74 வயது நிறைவடைந்த டிரம்ப் கடந்த 2-ஆம் தேதி கொரோனா தொற்றின் காரணமாக வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடம்பில் காய்ச்சல் அதிகமாகி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததையடுத்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டிரம்பின் ஊழியர் தலைவர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.ஆனால் டிரம்பிற்கு சிகிச்சையளித்த மருத்துவ வல்லுனர்கள் டிரம்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அறிவித்தனர்.

இதனால் டிரம்பின் உடல்நிலை குறித்தான கவலை டிரம்பின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு இடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பூரண குணமடைந்து கொரோனா  தொற்றிலிருந்து விடுபட்டு வெள்ளிமாளிகை திரும்பியுள்ளார்.வெள்ளை மாளிகையின் மேல் தளத்திற்கு சென்று பால்கனி வழியாக தனது ஆதரவாளர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு உற்சாகமாக சல்யூட் செய்தார்.இதனையடுத்து டிரம்ப் உற்சாகமாக தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பார் என வெள்ளைமாளிகை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பை பை சொன்ன டிரம்ப் தற்போது பூரணமாக குணமாகி தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

Categories

Tech |