கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் ஆபத்து இருப்பதாக ஆக்ஸ்போர்ட் மருத்துவ பேராசிரியர் கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிரமான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அனைத்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளையும் இழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் கூறியுள்ளார். இதுபற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சர் ஜான் பெல் கூறுகையில், ” கொரோனா பாதிப்பு மீண்டும் வராமல் பாதுகாக்கக்கூடிய ஆன்டிபாடிகள் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைகின்றன.
இங்கிலாந்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மீண்டும் பாதிக்கக்கூடும். உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலமாக செயல்படும் எதிர்கால தடுப்பூசிகள் சில மாதங்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். கொரோனாவின் இரண்டாவது அலை கட்டாயம் சாத்தியமாகும். அதனால் மக்கள் ஒவ்வொரு வருடமும் புதிய டோஸ் கொரோனவைரஸ் தடுப்பூசியை பெறலாம்” என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.