Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து குணமாகிய நடிகர் சரத்குமார் ‌..‌. வரலட்சுமியின் நன்றி ட்வீட்…!!

நடிகர் சரத்குமார் கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டார் என்ற தகவலை நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . இந்த தகவலை சரத்குமாரின் மனைவி ராதிகாவும் மகள் வரலட்சுமியும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் சரத்குமார் தான் குணமடைந்து வருவதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் காரணமாக முழுமையாக அவர் குணமாகிவிட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனது தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். இந்த செய்தியால் சரத்குமாரின் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |