Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள்…. நித்தியானந்தா….!!!!

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், எனவே ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை.

இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3ம் அலை மிக மோசமானதாக இருக்கும். எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை தொட்டு பேசுகிறார்கள்.

தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் விட்டது. மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |