கொரோனாவிலிருந்து குணமடைந்த அல்லு அர்ஜுன் தனது குழந்தைகளை கட்டியணைத்து கொஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
Meeting family after testing negative and 15 days of quarantine. Missed the kids soo much 🖤 pic.twitter.com/ubrBGI2mER
— Allu Arjun (@alluarjun) May 12, 2021
இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த அல்லு அர்ஜுன் தனது குழந்தைகளைக் கட்டியணைத்து கொஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.