இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மே 10ஆம் தேதி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 15 நாட்கள் கழித்து இன்று அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என்றும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டு வரலாம். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.