கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது பூரண குணமடைந்து, வீடு திரும்பிய அவர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு செலுத்தினார்.