கனடாவில் கொரோனா தீவிரம் அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள மிகப்பெரிய மாகாணத்தில் கொரோனா தீவிரம் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன்ராறியோவில் சுகாதார பொது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் ஜூன் மாதத்திற்குள் 600 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் கனடாவில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு அமெரிக்காவை விட ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை கனடா மக்களில் சுமார் 22 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். ஆனால் அமெரிக்காவில் சுமார் 37% பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஒன்ராறியோ மாகாணத்தில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.