Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்த குடும்பம்… மருத்துவமனையில் உற்சாக ஆட்டம்…!!!

கொரோனாவில் இருந்து குணமடைந்த குடும்பம் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு விட்டால், எப்படிப்பட்ட மனிதர்களும் சிறிது நேரம் கதிகலங்கி போகிறார்கள். அதேசமயத்தில் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைகிற நேரத்தில், அவர்களுக்கு அது உற்சாக கொண்டாட்டம் ஆக மாறி விடுகின்றது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரே குடும்பத்தினர் 19 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருக்கின்ற தனிமை வார்டில் கடந்த 8ம்தேதி தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சுதந்திர தினத்தன்று குணமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் செய்தி அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக தந்துள்ளது. அது மட்டுமன்றி அவர்களின் கொண்டாட்டத்திற்கும் வழிவகுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் மரணமடைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளிவந்த ‘சிச்சோர்’ என்ற இந்திப் படத்தில் வரும் ‘ சிந்தா கார்கே க்யா பேயேகா, மார்னே சே பெஹ்லே மார் ஜேயேகா’ என்ற பாடலை, குரோனா மேல் இருந்து குணமடைந்த அந்த குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் வைத்தே உற்சாக மிகுதியில் பாடி துள்ளி குதித்து ஆட்டம் போட்டுள்ளனர்.

அது அந்த வார்த்தையை கலகலப்பாக மாற்றியுள்ளது. இதனை அங்கிருந்த சிலர் தொலைபேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ” கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம். ஆனால் மாவட்ட மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்று நாங்கள் அனைவரும் தற்போது குணமடைந்துள்ளோம். இது எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் தான் ஆடினோம். இந்த வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைத்து அனைவரும் மிகுந்த துணிச்சலுடன் போராடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |