Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைகிறார் வெங்கையா நாயுடு …!!

கொரோனாவில் இருந்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருகிறார்.

இந்தியாவில் பல்வேறு எம்.பி-கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிருக்கும் கடந்த மாதம் 29-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இதுகுறித்து துணை குடியரசு தலைவர் அலுவலக ட்விட்டர் பதிவில் தொற்று உறுதியானதிலிருந்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கபடுவதாகவும் தற்போது நலமாக உள்ள வெங்காய நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தான் நலம்பெற வேண்டி கடிதங்கள் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |