கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் என்று எஸ் பி வேலுமணி மருத்துவ ஆலோசனையை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதைதொடர்ந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் அவசியம். மேலும் பாலில் கலந்து குடித்தால், தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். இது நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறை. இதை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வோம். கொரோனா நோய்தொற்று எதிரியை வெல்வோம் என்று மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளார்.