Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டும் ஒதுக்கி வைத்த ஊர்மக்கள்…. தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு….!!

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதிகளிடம் ஊர்மக்கள் பேசாததால்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மவரம் என்ற பகுதியில் பெனிராஜ் மற்றும் ஸ்ரீஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பெனிராஜ் வெல்லம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவரின் தாய் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா பறிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அதன் பிறகு மீண்டும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அக்கம் பக்கம் இருந்த வியாபாரிகள் மற்றும் அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளனர். அதே சமயத்தில் வாடிக்கையாளர்கள் எவரும் கடைக்கு வரவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடனை திரும்பக் கேட்டு தொல்லை செய்துள்ளனர். அதனால் மனமுடைந்த பெனிராஜ் மற்றும் ஸ்ரீஷா தம்பதியினர் தங்கள் வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்த தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |