Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி துணை முதல் மந்திரி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி துணை முதல்-மந்திரி இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தன்னை தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதால் லோக் நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,அடுத்த கட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி அவர் ஒரு வாரம் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Categories

Tech |