Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவில் இருந்து விடுபட்ட அதிபர்…. மனைவிக்கு தொற்று உறுதி…!!

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மிக  மோசமாக பாதித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பிரேசில் நாட்டில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. அவர்களில் 91,000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பை அந்தநாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ முறையாக கையாளவில்லை என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், சென்ற மாதம் 7ம் தேதி ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த சனிக்கிழைமை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். அவருடன் சேர்ந்து இன்னும் சில அமைச்சர்களுக்கும் கொரோனா செய்யப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவின் மனைவி மைக்கேல் போல்சனாரோவுக்கு நேற்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மைக்கேல் போல்சனாரோ நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும்  அவருக்கு முறையான மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அதேபோல பிரேசிலின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மார்கோஸ் பொன்டெஸூக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்கோஸ் பொன்டெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நான் நன்றாக இருக்கிறேன். சளி மற்றும் தலைவலி ஆகிய சில அறிகுறிகள் உள்ளன. இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |