மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இணைய வழியாக பொதுமக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 சதவிதம் பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவிற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போரில் மருந்துகள் கண்டறியும் வரை மக்கள் அனைவரும் முகக்கவசம் மட்டுமே தற்காப்பு கவசமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த கடுமையான போரில் வெற்றி கொள்வதற்கு மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு கட்டாயம். முக கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.தற்போது தொடங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் மூடபடாது.அதிக அளவு மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் புறநகர் ரயில்சேவை துவங்குவதற்கு நான் விரும்பவில்லை”என்று அவர் கூறியுள்ளார்.