Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு அப்புறம் இது அதிகமாயிட்டு…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது “கொரோனா பேரிடருக்கு பிறகு உறுப்பு செயலிழப்பு பிரச்னைகள் தொடர்பாக சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் செயலிழப்பு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்நிலைஇருக்கிறது. மூளைச் சாவு ஏற்பட்ட நபர்களிடமிருந்து உறுப்புகளை தானமாக பெற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொருத்தப்படுகின்றன. இந்த உன்னதமான சிகிச்சை முறையை துரிதப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சென்ற 2008-ல் ஹிதேந்திரன் எனும் 15 வயது மாணவன் விபத்தில் மரணமடைந்த போது, அவரது உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனே ஒரு ஆணையத்தை உருவாக்கி உறுப்பு தானத்தை கூடுதல் ஆக்கவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கிடையில் பெரம்பலுார், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரிகள் வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார் என்று  அமைச்சர் பேசினார்.

Categories

Tech |