Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு இந்த வருடமே முடிவு கட்டலாம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறி தற்போது ஒமைக்ரான் வைரசாக இருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த வருடத்துடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றபோது, அதில் பேசிய டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் “கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கி வருகிறது. இந்த வியூகங்களை பயன்படுத்தி நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் நாம் இந்த வருடத்திலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம். கொரோனாவிலுருந்து பாடம் கற்றுக்கொண்டு இதுபோன்ற நெருக்கடிகளைத் தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரையிலும் காத்திருக்கக்கூடாது” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |