ஷாங்காய் நகரிலுள்ள வீடுகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு அரசிடம் ஒப்படைக்கக் கோரி அந்நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 27,000 பேர் சீனாவிலுள்ள மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஷாங்காயிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவிலுள்ளார்கள். இந்நிலையில் ஷாங்காய் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது ஷாங்காயிலுள்ள வீடுகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகையினால் பொதுமக்கள் தங்களது வீடுகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு அந்நகர நிர்வாகம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு இருக்க காவல்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.