நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரும் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.