Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்க முடிவு ..!!

அனைத்து கொரோனா  மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின்  உள்ளிட்ட மருந்துகள் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில்  மருத்துவர்களின் பரிந்துரையின் படி சில மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சில சித்த மருந்துகள் கொரோனா தடுப்புக்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்த மருந்துகள் நல்ல பயன் அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உட்பட இரண்டு இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |