பிரிட்டன் நாட்டை சேர்ந்த 72 வயதான டேவ் ஸ்மித் என்ற முதியவருக்கு கடந்த 10 மாதங்களாக தொற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது .இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் கூட தொற்று தொடர்ந்து பரவி கொண்டுவருகின்றது. ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 15 முதல் 20 நாட்களில் குணமாகிவிடும். ஆனால் பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு 10 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் ஓய்வுபெற்ற டிரைவிங் ஆசிரியர் டேவ் ஸ்மித். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொற்று உறுதியானது. அனைவரையும் போல இவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு தொற்று குணமாகவில்லை. ஆம் கிட்டத்தட்ட 305 நாட்களுக்கு மேலாக அவருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. 43 முறை அவருக்கு பரிசோதனை எடுத்த போதிலும் பாசிட்டிவ் என்ற முடிவே வந்தது.
இதனால் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தேற்றினர். இவர் தனது இறுதி சடங்கு கூட ஏற்பாடுகளை செய்ய கூறி தனது உறவினர்களிடம் தெரிவித்திருந்தார். உலகிலேயே அதிக நாட்கள் அதாவது 305 நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்ற பெருமை இவரையே சேரும். இவருக்கு 44வது முறை பரிசோதனை செய்தபோது தான் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. தற்போது இவர் வீடு திரும்பியுள்ளார்.