Categories
உலக செய்திகள்

கொரோனாவுடன் வாறீங்க…. 2 வாரம் இந்தப் பக்கம் வராதீங்க…. ஏர் இந்தியாக்கு தடை போட்ட நாடு….!!

கொரோனா பரவல் காரணமாக ஹாங்காங்க் அரசு ஏர் இந்திய விமான சேவைக்கு 2 வாரம் தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் “ஏர் பப்புள்” முறையில் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்க் – டெல்லி இடையே கடந்த ஜூலை மாதம் விமானங்கள் இயங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலிருந்து ஹாங்காங்க் செல்லும் பயணிகள், பயணம் செய்யும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று ஹாங்காங்க் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வங்காளதேசம், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து டெல்லி ஹாங்காங் ஏர் விமானம் மூலம் வந்து இறங்கிய பயணிகளில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் தொடர ஹாங்காங்க் அனுமதி மறுத்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் ஹாங்காங்க் அரசு ஏர் இந்தியா விமான சேவைக்கு ஐந்து தடவை தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |