Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்க…. மருத்துவமனை முன்பு நடத்தப்படும் யாகம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்தபடி உள்ளதால் உடலை எரிக்க இடமில்லாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவை ஒழிக்க ஆரிய சமாஜ் அமைப்பு சார்பில் யாகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசு மருத்துவமனை முன்பும் யாகங்கள் நடத்தப்படுகின்றன.

Categories

Tech |