தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பேரிடரை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதிலும் குறிப்பாக, பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கொரோனாவை எப்படியாவது கட்டுப்படுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது தொண்டர்களுக்கு, நோய்த்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.