Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த…. மன்மோகன் சிங்க் மோடிக்கு கூறிய…. 5 யோசனைகள் இதோ…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்மோகன் சிங்க் மோடிக்கு 5 யோசனைகள் கூறியுள்ளார். அதாவது, “அடுத்த ஆறு மாதங்களுக்கு தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய வேண்டும். 10% தடுப்பூசிகளை அவசர தேவைக்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டமுன்கள வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி உற்பத்திக்கு சலுகைகள், மானியங்களை வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |