Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்திய கேரள அரசுக்கு ஐ.நா. பாராட்டு ….!!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைந்த கேரள அரசுக்கு ஐ.நா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐ.நா சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 23-ம் தேதி பொது சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும் பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவின் வெப் தொலைக்காட்சி மூலம் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்ட்ரோனியா கோட்டரஸ், ஐ.நா தலைவர் திட்ரானி முகமது பண்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சிங்யங், உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் அத்தனம்,  எத்தியோப்பிய அதிபர் ஷாலிவர்க்சுட்டே ஐ.நா மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா இதில் பங்கேற்று பேசினார். கேரளாவில் கடந்த இரு முறை ஏற்பட்ட மழை வெள்ள காலத்தை சமாளித்த அனுபவம் நிவா  வைரஸை திறம்பட கையாண்ட முறை  தற்போது கொரானா வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த உதவியதாக தெரிவித்துள்ளார். சீனாவில் வுகான் நகரில் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட தொடங்கியதிலிருந்து கேரள அரசு விழிப்புடன் செயல்பட்டு தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களை பின்பற்ற தொடங்கியது என அவர் மேலும் கூறினார்.

Categories

Tech |