கொரோனா தொற்றுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் ஆதி மனிதனின் டி .என்.ஏவில் வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபுடித்துள்ளனர்.
உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு மனிதனின் சகோதர இனமான நியாண்டெர்தல் மரபுக்கும் ,கொரோனா தொற்றிற்கும் இடையில் இருக்கும் ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நியாண்டர்தலின் டி.என்.ஏவில் கொரோனா தொற்றை 22% வரை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதிரியான நியாண்டர்தால்கள் வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இப்போதும் அவர்களது வம்சாவளியினர் வாழ்ந்து வருவதால் அவர்களின் டி.என்.ஏவில் 2% கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பா மற்றும் ஆசியாவை சேர்ந்த 2,200 மக்களிடம் பரிசோதனை செய்ததில் அவர்களின் உடம்பில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் மரபணு தொகுதி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.