தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி முதல்வர் அவர்களும் தோற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்தார்.
மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் ரூ.4,000 நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலப்பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. கொரோனா குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்கவேண்டாம். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி தான் நிரந்தர தீர்வு என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.