உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவை புற ஊதா எல்.இ.டிக்கள் விரைவாக கொள்ளும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் புற ஊதா எல்.இ.டிக்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொள்ளும் என அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலக மக்களை தீர்வு தேடும் நிலையில், எல்.இ.டிக்கள்கருணாவை உழைப்பதில் நல்ல பயனை அளிக்கவல்லது என்பதை ஒளி வேதியியல் மற்றும் ஒளி உயிரியல் இதழ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.