கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன:
கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம்.
- நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
- மஞ்சள் சீரகம் கொத்தமல்லி பூண்டு ஆகியவற்றை சமையலில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
- துளசி லவங்கப்பட்டை கருப்பு மிளகு சுக்கு மற்றும் திராட்சை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகைத் தேனீர் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும் தேவைப்பட்டால் உங்கள் சுவைக்கேற்ப வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
- 150 மில்லி சூடான பாலில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கலந்து குடிக்கவேண்டும்.
- வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புண் இருந்தால் புதினா இலைகள் அல்லது காரவே விதைகள் கொண்டு நீராவியை உள்ளிழுக்க வேண்டும்.
- இதனை நாளொன்றுக்கு ஒரு முறை செய்யலாம் நாட்டு சர்க்கரை அல்லது தேனுடன் கலந்து ஊற வைக்கப்பட்ட கிராம்பு ஆகியவற்றை உள் இருமல் அல்லது தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நடவடிக்கைகள் பொதுவான சாதாரண வறட்டு இருமல் மற்றும் தொண்டைப்புண் சிகிச்சைதான் ஆனால் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது இந்த வழிகாட்டு முறைகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை முறை அல்ல என்றும் மாறாக உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே என்பதையும் ஆயுஸ் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.