Categories
மாநில செய்திகள்

“கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்”….. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ” கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம்.

தமிழகத்தில் முககவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல் தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை.  முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் முக கவசம் அணிவதில் இருந்து எந்த சூழலிலும் விலக்கு அளிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |