Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து அடுத்த வைரஸ்… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி…!!!

உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இரண்டு நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயை கண்டறிந்த போது, 2019 ஆம் ஆண்டில் ‘சபரே வைரஸ்’ மிகப்பெரிய அளவில் பரவியது. அதனால் இரண்டு மருத்துவ நிபுணர்களும் பிறகு ஒரு நோயாளியும் உயிரிழந்தனர். அதற்கு முன்னர் சபரே மாகாணத்தில் முதன் முதலாக பரவியதால் அதற்கு சபரே வைரஸ் என்று பெயரிடப்பட்டது.

அந்த வைரஸ் ரத்தக்கசிவு, காய்ச்சல், எபோலா வைரஸ் நோய் போன்றவற்றிற்கு காரணமான அதே அரினா வைரஸ் குடும்பத்தினால் ஏற்படுகிறது. இந்தக் கொடிய வைரஸ் எபோலா போன்ற ஒரு ரத்த கசிவு காய்ச்சலை உண்டாக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான ஒரு வகை நோயாகும். ஆனால் இந்த வைரஸ் பற்றி முறையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |