Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை நினைத்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை”…. இந்திய கோவிட் குழு தலைவர் சொன்ன நிம்மதி தகவல்….!!!!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் என்.கே. அரோரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஓமைக்ரான் வைரஸின் பிஎஃப் 7 திரிபு 15 சதவீதம் பாதிப்புகளுக்கு காரணம். அதன் பிறகு 50 சதவீத பாதிப்புகள் பிஎன், பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை. அதன் பிறகு 10 முதல் 15 சதவீதம் வரை உள்ள பாதிப்புகள் எக்ஸ்பிபி மாறுபாட்டில் இருந்து வந்தவை என்று கூறியுள்ளார்.

ஆனால் சீனாவை போன்று இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். ஏனெனில் 97 சதவீத இந்தியர்களுக்கு கொரோனா 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்துள்ளது. இதேபோன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் கூட பாதுகாப்பாக இருக்கிறார்கள். மேலும் இதனால் பொதுமக்கள் யாரும் கொரோனா தொற்றை நினைத்து அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |