நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் சட்டமன்ங்ற தேர்தலுக்கான பிரச்சாரமும் தீவிரமாக நடந்தது. அந்தவகையில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் மேற்குவங்கத்தில் பாஜகவினர் கொரோனாவை பரப்பி விட்டு ஓடியவர்கள் என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.