கொரோனா வைரஸ் பாதிப்புகளை மறைக்க வேறு ஒரு கொடிய நோய் பரவி வருகிறது என சீனா வதந்தி பரப்புவதாக கஜகஸ்தான் நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்து உள்ளனர். எனவே சீனாவின் மீது உலக நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதற்கான காரணம் இத்தனை இறப்பிற்கும் அவர்களின் அஜாக்கிரதை தான் காரணம் என்பதால் தான்.
இந்த எதிர்ப்புகளை சமாளிக்க சீனா அவ்வபோது சில தந்திர செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொரோனா குறித்த உண்மையை மறைத்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ஐநா உலக சுகாதார அமைப்பில் இருந்து கூட நேரடியாக சீனாவிற்குச் சென்று உண்மையை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை விட ஒரு கொடிய வைரஸ் மத்திய ஆசிய நாடுகளில் பரவி வருவதாகவும், குறிப்பாக கஜகஸ்தான் என்னும் நாட்டில் அந்த நோய் 1772 பேரை காவு வாங்கி உள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தது.
இதனை தற்போது கஜகஸ்தான் நாட்டு அரசு மறுத்ததோடு, அது முற்றிலும் பொய். சீனா கொரோனா வைரஸால் ஏற்பட்ட எதிர்ப்பை மறைப்பதற்காக இப்படி ஒரு வதந்தியை கிளப்பி நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸை மறைப்பதற்காக வேறு ஒரு கொடிய நோய் உருவாகி பரவி வருவதாக உலக மக்களிடம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த நினைத்த சீனாவிற்கு எதிராக மீண்டும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.