உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று CDC ஆய்வு குழு கண்டறிந்துள்ளது.
இந்த வைரஸ் பரவ தொடங்கினால் எபோலா, கொரோனா விட கொடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மூட்டு மற்றும் தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் ரத்தப்போக்கு, தடுப்புகள் மற்றும் எரிச்சல் ஆகியவை அதன் அறிகுறிகளாக இருக்கும். அதுமட்டுமன்றி இதற்கான மருந்து தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.