Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விட சாலை விபத்தால் அதிக உயிரிழப்பு… இந்திய மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.46 லட்சம், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சம் என அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |