வடகொரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு போதும் கிம் ஜாங் அன் வெளிப்படையாக அறிவித்தது இல்லை.
மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கின்றது என்பது அந்த நாட்டினருக்கே வெளிச்சம். அந்த அளவுக்கு மிகவும் ரகசியம் காக்கும் நாடாகயுள்ள வடகொரியாவில் கொரோனா நோய் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது.
இருப்பினும் வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த 2 வாரங்களாக இன்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், கொரோனாவை வென்று விட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கிம் ஜாங் அன் கூறியதாவது, “நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு” என்று அவர் கூறியுள்ளார்.